Advertisment

சராசரி மனிதர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டரை வழங்குவாரா நிர்மலா சீதாராமன்? குஷ்பு

ku

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ராகுலுடனான ஆலோசனையில் உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசினீர்களா? பாராளுமன்ற தேர்தல் குறித்து பேசினீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அது குறித்து பேசவில்லை என்று குஷ்பு சொன்னதும், ராகுல்காந்தியிடம் என்னதான் பேசுனீங்க? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

அதற்கு பதிலளித்த குஷ்பு, ‘’தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்த அப்டேட்டுக்காகத்தான் ராகுல்காந்தியை சந்தித்தேன்’’என்றார்.

Advertisment

ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீத்தாரமன் சந்திக்க மறுத்தது குறித்து கேள்விக்கு, ‘’துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் சந்திக்காதது பெருத்த அவமானம்.

ஓபிஎஸ் சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘’எமர்ஜென்சி என்பதால் கொடுத்ததாக சொல்கிறார்கள்.

துணை முதல்வரின் சகோதரர் என்பதால் வழங்கியிருக்கிறார்.சராசரி மனிதர்களுக்கு இப்படி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராணுவ ஹெலிகாப்டரை வழங்குவாரா?’’என்று கேள்வி எழுப்பினார்.

congress Delhi kushboo Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe