Advertisment
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள ஜெயநகர் பகுதியில் வாக்களித்தார். ஹெச்.ராஜா காரைக்குடியில் தனது வாக்கினை செலுத்தினார்.