நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களை பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர் கட்சி அந்தஸ்த்தையும் இழந்துள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் கரிய கமிட்டீ ஏற்க மறுத்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியே தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர். இருந்தாலும் தனது முடிவில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று ராகுல் காந்தி இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.

congress

Advertisment

Advertisment

இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தியிடம் செய்தியாளர் ஒருவர் 'ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் அடுத்தத் தலைவராக நியமிக்க வேண்டும் என நீங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வருகிறதே என்று கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்த ராகுல் 'அடுத்தத் தலைவரை நியமிக்க நான் யார்? அதைக் கட்சி பார்த்துக்கொள்ளும்' எனக் கூறி சென்று விட்டார். இதனால் வெகு விரைவில் காங்கிரஸ் கட்சியில் தலைமை மாறும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.