தமிழக காங்கிரஸுக்குள் சலசலப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பவர் கே.எஸ்.அழகிரி. ஒரு காலத்தில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்த அவரை, தற்போது ப.சி. தரப்பே கடுமையாக எதிர்க்கின்றனர். கார்த்தி சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பத் தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி மோடி அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், பட்ஜெட்டை எதிர்த்தும், தமிழக காங்கிரஸ் சார்பில் தேவகோட்டையில் கண்டனக் கூட்டம், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநில அளவிலான கூட்டத்திற்கு மாநிலத் தலைவர்தான் தலைமை ஏற்பது வழக்கம். ஆனால் ப.சி.யும் கார்த்தி சிதம்பரமும் பங்கேற்கும் இந்தக் கூட்டத்திற்கு அழகிரியை அழைக்காத ப.சி.தரப்பு, இந்தக் கூட்டத்தை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் நடத்திவிட்டது இதனால் காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்கின்றனர்.