Advertisment

தமிழ்நாட்டில் அடுத்து எங்க ஆட்சி தான்... பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அதிரடி பேச்சு!

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், பாஜக சார்பில் விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜக தலைவர்கள் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisment

bjp

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது குடியுரிமை மசோதாவால் யாரையும் வெளியேற்ற போவதில்லை. பதினோரு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழ்வோருக்கு இந்த சட்டத்தால் எந்த பிரச்சினையும் வராது. புதிதாக வரும் மற்றவர்களுக்காகதான் இந்த மசோதா செயல்படுத்தப்படுகிறது' என்று கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்கனவே இந்த சட்டம் மூன்று முறை திருத்தி அமைக்கப்பட்டதாகவும், பாஜக அரசு மக்கள் நலனுக்காக ஒரேயொரு முறை திருத்தியுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய எச்.ராஜா அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சியமைக்கும் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

citizenship amendment bill h.raja politics Speech
இதையும் படியுங்கள்
Subscribe