கடலூர் மாவட்டத்திற்குவேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும்தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வரும் பொங்கல் மற்றும் புத்தாண்டுக்குஅமைச்சர் சி.வே.கணேசன் வாழ்த்து தெரிவித்து, தினகரன் நாளிதழோடு இணைப்பாககடலூர் மாவட்டத்திற்காகவெளியிடப்பட்ட காலண்டரில், 12 பக்கங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின், கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கட்சியின் தலைவர்களான அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் படங்களோடு அவரது படத்தைப் போட்டுவிளம்பரமாகக் கொடுத்துள்ளார்.
இது திங்கட்கிழமை காலை கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுள்ளது. இதனைப் பார்த்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், சிதம்பரம் பகுதியில் விற்பனைக்காக காலண்டர் கொடுக்கப்பட்ட கடைகளில் மொத்தமாக அனைத்தையும் வாங்கியுள்ளனர்.அப்போது, “எங்கள் அமைச்சர் படம் இல்லாத காலண்டரா? எனக் கூறி கடையில் இருக்கிற காலண்டர் எல்லாத்தையும் எடுங்க”என்றுஆறு பேர் கொண்ட கும்பல் வாங்கினார்கள் என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து திமுகவினரிடம் கேட்டபோது, “இதுபோன்றசெயல் எல்லாம்எங்கள் அமைச்சர் செய்யமாட்டார். இது வேறுயாரோ செய்திருக்கலாம்” என்கின்றனர். இச்சம்பவம்அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பைக் கிளப்பியது.