தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சராகவும் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தவர் ராஜேந்திரபாலாஜி. அவரிடமிருக்கும் கட்சி பதவியான மா.செ.பதவியை கட்சியின் ஒருங்கிணைப்பளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து அதிரடியாக பறித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajendrira-balaji.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ராஜேந்திரபாலாஜியிடமிருந்து கட்சி பதவி பிடுங்கப்பட்டிருப்பதில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போயிருக்கிறார்கள். இந்த பதவி பறிப்பு அதிமுக கட்சிக்குள் பலரையும் ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறது.
ராஜேந்திரபாலாஜியின் பதவி பறிப்பு பின்னணி குறித்து விசாரித்தபோது, ’’ அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை மனம்போனப்போக்கில் வெளிப்படுத்தக்கூடாது என அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார் எடப்பாடி. இதனை அமைச்சர்கள் பலர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. குறிப்பாக , ராஜேந்திரபாலாஜியின் பேட்டிகள், கருத்துக்கள், பேச்சுக்கள் பலதும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதனால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பல சங்கடங்கள் ஏற்பட்டன.ரஜினியின் கருத்துக்களை ஆதரிப்பது, இந்துத்துவாவை தூக்கிப்பிடிக்கும் முகமாக இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரானவைகளை பேசுவது, தனக்கு எதிராக எழுதும் பத்திரிகையாளர்களை தாக்குவது, முதல்வரை ஒருமையில் விமர்சிப்பது என அவரது நடவடிக்கைகள் எடப்பாடிக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும் துறை வாரியாக நல்ல முடிவுகளை அவர் எடுக்கும் போது அதனை விரும்பாத உயரதிகாரிகள், எடப்பாடியிடம் போட்டுக்கொடுப்பது என ராஜேந்திரபாலாஜிக்கு எதிரானவைகள் சமீபகாலமாகவே கச்சைக் கட்டிக்கொண்டிருந்தன.
இந்த சூழலில், மாவட்டத்தில் அவரால் வளர்க்கப்பட்ட பலரும் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்களாக மாறிப்போயிருக்கிறார்கள். இதற்கிடையே, அண்மையில், ரஜினியை மிக ரகசியமாக சந்தித்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. இதனை எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறது மாநில உளவுத்துறை. இதனடிப்படையில்தான், அவருக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் அவரது கட்சிப் பதவியை பறித்திருக்கிறார்கள் ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும். இனியும் அவர் கட்சிக்கு கட்டுப்பட்டு அமைதியாக இல்லாமல் வழக்கம்போல் தனது இயல்பைக் காட்டினால் அமைச்சர் பதவியும் பறிப்போகும் ’’ என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். தம்மிடமிருந்த கட்சிப் பதவியை ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் பறித்ததில் மிகவும் நொந்து போயிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)