பாஜக தனது அரசின் செயல்பாடுகள், தனது அரசுக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலை தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் அந்த சேனலை தொடங்க இருப்பதாகவும், இதற்காக சில தனியார் நிறுவன தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

New Television

Advertisment

Advertisment

இதற்கான நிர்வாக ஆசிரியர், விவாத நிகழ்ச்சிகளை நடத்த நெறியாளர் என பல்வேறு பணிகளுக்கு தேவைப்படுவோரை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

தற்போது தமிழக பாஜக பொறுப்பாளர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த தொலைக்காட்சியிலும் விவாதத்திலும் பங்கேற்கவில்லை. விரைவில் அவர்கள் பாஜகவுக்காக தொடங்கப்படும் தொலைக்காட்சி சேனலில் பங்கேற்று, கருத்துக்களை பகிர்வார்கள் என்று சொல்லப்படுகிறது.