New President of Tamil Nadu Congress Committee appointed

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நியமித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்புகளைக் காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.