புதிய அரசியல் கட்சி தொடங்கினார் கே.கே.செல்வகுமார்

kks

இன்று முத்தரையர் சதயவிழா. முத்தரையர் சிலைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மாலைஅணிவித்து மரியாதை செய்தனர். திருச்சியில் உள்ள சிலைக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செய்த நிலையில் முத்தரையர் முன்னேற்றச் சங்கம் வைத்துள்ள திருச்சி கே.கே.செல்வகுமார் புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடி அருகில் உள்ள பட்டங்காடு கிராமத்தில் மாநாடு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

kk2

அப்போது திடீரென சிவப்பு மஞ்சள் கொடியை காட்டி இன்று முதல் சங்கம் தமிழக மக்கள் கட்சியாக அறிவிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

மேலும் இந்த கட்சி ஒரு ஜாதிக்கட்சி இல்லை எந்த சமுதாயத்தில் பிரச்சனை என்றாலும் முன்னால் வந்து நிற்கும். அதனால் ஜாதிகள் கடந்தும் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும் என்றார்.

செல்வகுமார் திமுக அனுதாபியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kks

party Political seelvakumar
இதையும் படியுங்கள்
Subscribe