தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டனை எடப்பாடி பழனிசாமி திடீரென நீக்கினார். இதையடுத்து அமைச்சராவப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் இருந்து வந்தது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரான குமரகுருவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. குமரகுரு கோரிக்கையை ஏற்றுதான் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் குமரகுரு.