Advertisment

எல்லாக் கூட்டணிக் கணக்கும் மாறும்!!

ks alagiri - ttv dhinakaran

கரோனா காலம், ஊரடங்கு என்பதால் அமமுகவின் டிடிவி தினகரன், புதுச்சேரியிலுள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அங்கிருந்தப்படியே அரசியல் நிலவரங்களை கவனித்து வரும் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, கடந்த மாதம் முறைப்படி இ-பாஸோட போய், ஆரோவில் பண்ணை வீட்ல இருக்கும் தினகரனை சந்தித்திருக்கிறார். பாஜ.க.வின் அழுத்தங்களுக்கு பணிந்து, காங்கிரஸை தி.மு.க. கழட்டிவிடப் போவதாகவரும் செய்திகள் பற்றி இருவரும் பேசியிருப்பதாகவும்,சோனியா- ராகுல் கவனத்துக்கும் இதுபோன்ற தகவல் சென்றிருப்பதாகவும்கூறும்அழகிரி, அப்படி ஒரு நிலைமை வந்தால், காங்கிரஸ் உருவாக்கும் புதிய கூட்டணியில் அ.ம.மு.க. பங்கேற்க வேண்டும் என்றும்,ரஜினி அரசியலுக்கு வந்தால் எல்லா கூட்டணி கணக்கும் மாறும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

Advertisment

TN CONGRESS PARTY admk ammk TTV Dhinakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe