நீட் தேர்வால் மாணவர் தற்கொலை - அன்புமணி இராமதாஸ் இரங்கல்!

anbumani ramadoss

நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

அதில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்!

மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாத நீட் தேர்வால் நாம் இன்னும் எத்தனை மாணவச் செல்வங்களின் உயிர்களைப் பறி கொடுக்கப் போகிறோம். இந்தத்துயரங்களுக்கு முடிவுகட்ட நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

anbumani ramadoss pmk
இதையும் படியுங்கள்
Subscribe