Advertisment

''யார் யாரைச் சென்று பார்த்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது'' - அண்ணாமலை பேச்சு

publive-image

யார் யாரைச் சென்று பார்த்தாலும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''நீட் தேர்வை தமிழக மாணவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. நீட் தேர்வின் பெர்ஃபார்மன்ஸ்-ஐ பார்க்கிறோம், பாஸ் பர்சன்டேஜை பார்க்கிறோம். எத்தனை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், குறிப்பாக சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்புகளில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போகிறார்கள் என்பது தெரிகிறது. எனவே யார் யாரைச் சென்று பார்த்தாலும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யாது.

Advertisment

நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும். அதையும் உறுதியாக சொல்லுவோம். திமுகவினரே நீட் தேர்வு குறித்து முரண்பாடாகப் பேசி வருகின்றனர். ஒருவர் நீட் தேர்வை தடை செய்யும் ரகசியம் இருக்கு என்று சொல்கிறார். ஒரு அமைச்சர் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம், தேர்வுஉறுதியாக நடக்காது என்று எக்ஸாமுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சொன்னார். பின்னர் இந்த வருடம் படிங்க, அடுத்த வருடம் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம்னு சொன்னாங்க. பார்ட் டைம் அரசியலுக்கு வந்துவிட்டு ஃபுல்டைம் சினிமா சூட் பண்றவங்க, பாட்டு ரிலீஸ் பண்றவங்க, படம் ரிலீஸ் பண்றவங்க பேச்சைக் கேட்காதீர்கள்'' என்றார்.

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe