Advertisment

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு; தொண்டர்கள் அதிர்ச்சி

nationalist congress party chief sharad pawar resign national chief post 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார்.

Advertisment

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும்மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார், தான் வகித்து வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரின் இந்த அறிவிப்பைஏற்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 5 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 4 உறுப்பினர்களும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் 54 சட்டமன்ற உறுப்பினர்களும், கேரளாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்களும், குஜராத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் உள்ளனர். அண்மையில்தேசியவாத காங்கிரஸ் கட்சி தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

resignation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe