மறதியில் சட்டசபைக்கு வெள்ளை சட்டை அணிந்து வந்த நத்தம் விஸ்வநாதன் (படங்கள்)

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனச்சட்டசபைக்குள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை சட்டசபை கூடியபோது அ.தி.மு.க எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் கருப்பு அணிந்து வராமல் வழக்கம்போல் மறதியில் வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளார். அதன் பின்னர், அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததை பார்த்துவிட்டு, நத்தம் விஸ்வநாதன் காரில் ஏறிச் சென்று மீண்டும் கருப்பு சட்டை அணிந்து வந்தார்.

Legislative Assembly natham viswanathan Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Subscribe