
பல்வேறு வகையான மோதல்களுக்கு பிறகு கடந்த 11 ஆம் தேதி வானகரத்தில் இரண்டாவது முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டிருந்தார். அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர்களாக பெஞ்சமின், ராஜன் செல்லப்பா, ந.பாலகங்கா, செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ப.தனபால், ஓ.எஸ்.மணியன், காமராஜ், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கூடுதலாகநத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)