Advertisment

நடராஜர் கோவில் கருவறையில் வேட்புமனு! - பூஜைசெய்து வழிபட்ட அதிமுக வேட்பாளர்கள்!

natarajar temple admk mlas pray

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாண்டியன் மற்றும் காட்டுமன்னார்கோவில் அ.தி.மு.க. தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள முருகுமாறன் ஆகிய இருவரையும் மீண்டும் அதே சட்டமன்றத்தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை.

அதேபோல், முன்னாள் எம்.பி.யும் அ.தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான அருண்மொழித்தேவனை புவனகிரி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவித்துள்ள அதிமுக தலைமை. இவர்கள் மூவரும் இன்று (15/03/2021) மனுத்தாக்கல் செய்தனர்.

இவர்கள் மூவரும் மனுத் தாக்கல் செய்வதற்கு முன் உலகப் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு, கிழக்குக் கோபுர வாயில் வழியாக குடும்பத்துடன் வந்து வேட்பு மனுவை, தீட்சிதரிடம் கொடுத்து கருவறையில் வைத்து பூஜை செய்தனர். பின்னர் மேலவீதி கோபுரம் வழியாக வெளியே வந்தனர். அதைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முருகுமாறனும், சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாண்டியனும், புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அருண்மொழித்தேவனும் மனுத் தாக்கல் செய்தனர்.

Advertisment

இவர்கள் மூவரும் செண்டிமெண்டாக நடராஜர் கோவில் கருவறையில் வேட்பு மனுவை வைத்து பூஜை செய்ததால் வெற்றி நிச்சயம் எனக் கட்சியினர் பேசி வருகின்றனர்.

admk Chidambaram Natarajar temple
இதையும் படியுங்கள்
Subscribe