sasikala natarajan

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலா கனவருமான நடராஜனின் உடல் தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Advertisment

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சென்னை குலோபல் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த நடராஜன், நேற்று இரவு காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்தநிலையில் பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா பரோல் கேட்டு சில நாட்களுக்கு முன்பிளிருந்தே மனு செய்திருந்தார், ஆனால் மறுக்கப்பட்டுவந்தநிலையில், இன்று தஞ்சையை தவிர எங்கும் செல்லக்கூடாது, பத்திரிக்கையாளர்களை சந்திக்கக்கூடாது என்கிற நிபந்தனைகளோடு 15 நாள்பரோல் வழங்கப்பட்டது.

பெங்களுருவில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அவரோடு நான்கு கார்கள் மட்டுமே வந்தது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து நடராஜனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு கொண்டுவரப்பட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே திருச்சிக்கு வந்துவிட்ட சசிகலா திருச்சி துவாக்குடி டோல்கேட்டில் ஆம்புலன்ஸ் வரும்வரை 35 நிமிடம் காரிலேயே காத்திருந்தார். அவரோடு வந்த பெங்களுரூ புகழேந்தியும் கட்சிக்காரர்களும் முன்னாடியே வந்துவிட்டனர்.

Advertisment

நடராஜனின் உடல் சுமந்துவந்த ஆம்புலன்ஸ்க்கு பின்னாடியே 6.45 க்கு தஞ்சை வந்து சேர்ந்தார். அங்கு மாலை நான்கு மணிக்கே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது.

நடராஜனின் உடல் தஞ்சையில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை மாலை நான்கு மணிக்கு ஊர்வலமாக சென்று விளார் அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது.

தஞ்சைக்கு டி,டி,வி,தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்,எல்,ஏக்கள் அனைவரும் ஆஜராகியுள்ளனர்.

காலை 11 மணியில் இருந்து திவாகரனும் அவரது ஆதரவாளரான திருவாரூர் மா,செ எஸ்,காமராஜீம் துக்கம் விசாரிக்க வருபவர்களை அனுசரித்து அனுப்பிக்கொண்டிருந்தார். அவரது மகன் ஜெய்ஆனந்தும் திவாகரன் மனைவியும் நடராஜன் உடல் வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே வந்தனர்.

தஞ்சை அருளானந்தம் நகரமே மாலை 4 மணி முதல் பரபரப்பாகியிருக்கிறது.