Nasser relieved of cabinet; The new minister taking office

தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அமைச்சரவையில் மாற்றம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராஜ்பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் தற்போது அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

நாசருக்கு பதில் மன்னார்குடி சட்டமன்றஉறுப்பினராக உள்ள டி.ஆர்.பி. ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். டி.ஆர்.பி.ராஜாவிற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் வரும் 11 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் ஆகும் நிலையில் அமைச்சர்களுக்கான துறைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். தற்போது மீண்டும் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.