Advertisment

“பாஜகவுடன் கள்ளக்கூட்டணி அம்பலம்; இரட்டை வேடம் போடும் அதிமுக” - ஆவடி நாசர் காட்டம் 

Nasser criticized AIADMK playing a double role

இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களை அதிமுக ஏமாற்றுகிறது என முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமிய மக்களை அவதூறு செய்து பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செயக்கோரும் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட மறுத்து, இஸ்மாயில் மக்களுக்கு மீண்டும் துரோகத்தைச் செய்துள்ளது அதிமுக. இதன் மூலம் பாஜகவுடன் கள்ளக்கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர்வது அம்பலமாகி உள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர்.

Advertisment

‘வெறுப்பு பேச்சு’, ‘வகுப்பு வேற்றுமையைத் தூண்டுகள்’ ‘அரசியலமைப்பை மீறுதல்’ என்ற 3 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய அந்த தீர்மானத்திற்கு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், வில்சன், அப்துல்லா ஆகியோர் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதிமுகவை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திடவில்லை.

ஆட்சியில் இருாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் உரிமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் அவர்களுடன் தோளோடு தோள் நின்று ஆதரவாக செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் திமுகதான். மதப்பிரிவிளையாதிகளுடன் அன்று முதல் இன்று வரை நெஞ்சுரத்தோடு களமாடி வருபவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அடிமை அதிமுகவோ ஒரு பக்கம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் எனக் கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபக்கம் பாஜகவின் கள்ள உறவைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே சி.ஏ.ஏ.வை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்ட அதிமுக, தற்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பது இப்போது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அம்பலமாகி உள்ளது. இஸ்லாமியர்கள் கனிவு, சகிப்புத்தன்மை இல்லாத ஆபத்தானவர்கள்" என்று பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட சொற்களைப் பயன்படுத்திப் பேசியிருந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமாருக்கு எதிராய் ஒரு கையெழுத்து போடக் கூட வக்கற்ற நிலையில் தான் அதிமுக உள்ளது. இஸ்லாமியருக்கு பாதுகாவலாக இருப்பது அதிமுக மட்டுமே? என வாய்கிழியப் பேசும் எடப்பாடி பழனிசாமியின் பொய் வேடம் கலைந்து போய் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது.

இஸ்லாமிய மக்களது முதுகில் குத்துவதையே வாடிக்கையாக கொண்ட அடிமை அதிமுகவையும் அதன் தற்போதைய தளகர்த்தா பழனிச்சாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

admk Nassar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe