Advertisment

மகனுடன் வாரணாசி சென்றது ஏன்? சீனியர்களிடம் பகிர்ந்த ஓ.பி.எஸ்.

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போடியிடுகிறார் பிரதமர் மோடி. இதற்காக வாரணாசியில் பேரணி நடத்தினார். இதனைத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்திருக்கிறார் மோடி. மோடி மனுத்தாக்கல் செய்யும் போது பாஜகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் தன்னுடன் இருக்க வேண்டும் என தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார் பாஜக தேசிய தலைவர் அமீத்சா.

Advertisment

narendra modi - O Panneerselvam - varanasi

ஆனால், இந்த அழைப்பு அதிமுகவுக்கு தலைமைக்கு கொடுக்கப்படவில்லையாம். அதே சமயம், இதனையறிந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தனது மகன் ரவீந்திரநாத்துடன் மோடியின் மனுத்தாக்கலில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற திட்டத்துடன் 2 நாட்களுக்கு முன்பே வாரணாசிக்கு சென்று விட்டார். அதே போல கலந்துகொண்டிருக்கிறார் ஓபிஎஸ் !

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதற்காகத்தான் வாரணாசிக்கு போயிருக்கிறீர்களா? என ஓபிஎஸ்சிடம் அவரது ஆதரவு சீனீயர்கள் சிலர் கேட்க, ‘’ மூதாதையர்களுக்கு திதி கொடுக்கவே வாரணாசி வந்தேன். வந்த இடத்தில் மோடியின் நிகழ்வு இருந்ததால் கலந்துகொண்டேன் ‘’ என சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ்!

Narendra Modi O Panneerselvam Varanasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe