நாங்குநேரி அதிமுக வேட்பாளரான நாராயணன், அமைச்சர் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisment

nanguneri dmk admk candidate

காலை 12 மணியளவில் தேர்தல் அதிகாரியான மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலர் நடேசனிடம், நாராயணன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதுசமயம் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, ராஜலக்ஷ்மி, வளர்மதி, இவர்களுடன் புறநகர் அதிமுக மா.செ பிரபாகரன், நெல்லை மாநகர அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment

nanguneri dmk admk candidate

இதனையடுத்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், கூட்டணி தொண்டர்களுடன் வட்டாட்சியர் அலுவலகம் வந்து, மதியம் சுமார் 1.55 அளவில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் திமுக அமைப்பு செயலாளர் ஐ.பெரியசாமி, மா.செ ஆவுடையப்பன், கடையநல்லூர் எம்.எல்.ஏ முகமது அபுபக்கர், நெல்லை காங்கிரஸின் கிழக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.