Advertisment

திமுகவுக்கு அந்த தொகுதியை தரக்கூடாது... காங்கிரஸ் நிர்வாகிகளின்...

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. குமரி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றார். இதையடுத்து நாங்குனேரி எம்.எல்.ஏ. பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார்.

Advertisment

tamilnadu-congress-committee

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலோடு சேர்த்து நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நாங்குனேரில் போட்டியிட பீட்டர் அல்போன்ஸ், ராணி வெங்கடேன் உள்ளிட்டவர்கள் விரும்புகிறார்கள். அதற்கான முயற்சிகளையும் எடுக்கிறார்கள்.

Advertisment

ஒருவேளை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சோளிங்கரை இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டது போல, நாங்குனேரியிலும் நடக்கலாம். அப்படி திமுக போட்டியிட்டால், திமுக சார்பில் போட்டியிட ஆரோக்கிய எட்வின், களக்காடு மாஜி பேரூராட்சித் தலைவர் பி.சி.ராஜன் ஆகியோர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் பிரமுகர்களோ, நாங்குனேரியை திமுகவிடம் விட்டுக் கொடுத்துடாதீங்கன்னு ராகுல்காந்தியை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நாங்குனேரியில் நிற்கப்போவது திமுகவா, காங்கிரசான்னு இரண்டு கட்சிகளின் தலைமையும் ஆலோசித்து முடிவு எடுக்கும் என்கிறார்கள் அக்கட்சியினர்.

Peter Alphonse vasantha kumar congress byelection assembly nanguneri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe