ADVERTISEMENT

அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இருந்த போதிலும், தற்போதும்... நாங்குநேரி குஷ்பு...

01:13 PM Oct 14, 2019 | rajavel

ADVERTISEMENT

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக நேற்று தூத்துக்குடி வந்தார் அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு.

ADVERTISEMENT


விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரியில் அதிகார பலம், பணப்பலத்தை வைத்து அ.தி.மு.க. வெற்றி பெற நினைக்கிறது. ஆனால் அது நடக்காது. அ.தி.மு.க. வின் பணப்பலம் இங்கு வெற்றி பெறாது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கோட்டை. இங்கு காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு மாறியுள்ளனர். அவர்கள் தெளிவாக உள்ளனர்.



இந்தியா முழுவதும் ஒரு நல்ல ஆட்சி இருக்க வேண்டும், எல்லோருக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும், விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அது காங்கிரசால் மட்டும்தான் முடியும். இது நாங்குநேரி தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொகுதியில் நல்ல பணிகளை செய்ய ஆசைப்படுகிறார். ஆனால், எங்களை அரசு செய்யவிடாமல் தடுக்கிறது. தமிழக அரசும் நாங்குநேரி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. வேண்டுமென்றே அரசு ஒதுக்கி வைத்து உள்ளதா?
தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இருந்த போதிலும் சரி, தற்போதும் சரி எந்தவித மக்கள் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.


பிரதமர் மோடி, சீன அதிபருடனான சந்திப்பின்போது, வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். எல்லாவற்றையும் அரசியல் ரீதியாக பார்க்க முடியாது. உலக தலைவர்கள் சந்திப்பின்போது, வேட்டி, சட்டை அணிந்து அதனை உலக அரங்குக்கு எடுத்து செல்வது பெருமையாக உள்ளது. தூய்மை பாரதம் திட்டம் கொண்டு வந்தார்கள். பாராட்டக்கூடிய வி‌‌ஷயம் தான்.


அதேநேரத்தில் கோவளம் கடற்கரை பகுதி சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அங்கு பிரதமர் குப்பையை எடுக்கிறார். அந்த பகுதியில் மட்டும் எப்படி குப்பை வந்தது?. புகைப்படத்துக்காக ஒரு பிரதமர் இதுபோன்று செய்வது வேதனையாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

அதனைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுடன் சென்று வாக்குகள் சேகரித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT