Advertisment

"பிரச்சாரத்திற்கு இந்த அமைச்சரா அப்படினா தோல்வி தான்"...கலக்கத்தில் அதிமுக!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை கழகம். அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் எனவும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் அதிமுக கானை ஒன்றியத்தில் செயலாளராக உள்ளார் முத்தமிழ்ச்செல்வன். நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரன் கட்சி போட்டியிடவில்லை.

Advertisment

admk

இந்த நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு அதிமுக சார்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தேர்தல் பணிக்கு நியமித்துள்ளனர். இதனால் நாங்குநேரி அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, ராஜேந்திர பாலாஜி சமீப காலமாக பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதே இதுக்கு காரணமாக கூறிவருகின்றனர். இதனால் அவரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தாமல், தேர்தல் பணியை மட்டும் செய்யவிடலாம் என்று அப்பகுதி நிர்வாகிகள் அதிமுக தலைமையிடம் வேண்டுகோள் வைப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு வேளை ராஜேந்திர பாலாஜியை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினால் அது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறிவருகின்றனர்.

byelection eps ops minister admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe