Advertisment

பெயர் பலகை விவகாரத்தில் மோதல்... நடவடிக்கை எடுக்க எம். ஹைதர்அலி வலியுறுத்தல்

dddd

சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் எம்.ஹைதர்அலி என்பவர் தமுமுக தலைமை அலுவலகம் என பெயர் பலகை மற்றும் கொடி வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லா தரப்பினர், அந்த பெயர் பலகையையும், கொடியையும் உடைத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Advertisment

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹைதர்அலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு சொஸைட்டி சட்டம் கீழும் (பதிவு எண் 1/2015),இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டு முறையாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மண்ணடியில் உள்ள எங்கள் தலைமையகத்தின் பெயர்ப்பலகை புனரமைக்கப்பட்டு மாட்டப்பட்டு இருந்தது.இதுகுறித்து பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்கள், காயிதேமில்லத் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஹாஜாகனி மற்றும் தாம்பரத்தில் செருப்பு வியாபாரம் செய்யும் யாகூப் ஆகியோருடன் வந்தவர்கள்நேற்று நண்பகலில் காவல்துறை வசம் புகார் அளித்து இருக்கின்றனர்.

புகாரின் அடிப்படையில் எங்களிடம் விசாரணை செய்த சென்னை மாநகர கடற்கரை காவல் நிலைய ஆய்வாளரிடம் எங்கள் அமைப்பு சார்ந்த ஆவணங்கள் ஒப்படைத்து அவர்கள் நீதிமன்ற தடை இருப்பதாக குறிப்பிடும் எஸ். ஹைதர்அலி நான் அல்ல என்பதையும் அந்த இடைக்கால வழக்கு தமுமுக அறக்கட்டளை தொடர்பானது என்பதையும் நீதிமன்ற இடைக்கால உத்தரவை அவர்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக சொல்கிறார்கள் என்று விளக்கினோம்.

ஆனால் இதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் மேற்குறிப்பிட்டவர்களுடன் வந்தவர்கள் எங்கள் அமைப்பின் நிர்வாகிகளை தாக்கியதோடு எங்கள் அமைப்பின் பெயர்பலகையை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் அனைவருக்கும் நல்லாட்சி வழங்கிட உழைத்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டு கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Chennai Mannady
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe