“நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி..!” பா.ஜ.க பொறுப்பாளர் பேச்சால் குழப்பம்

Namachchivayam led rulr  BJP leader confused by speech

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை, ராஜினாமா செய்தது.

அதனைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியுடன் புதுச்சேரி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் அடுத்தகட்ட முடிவு அறிவிக்கப்படும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, “நமச்சிவாயம், நமச்சிவாயம் எனஉச்சரிப்பதே நமது லட்சியம். கோவிலுக்குச் செல்வதும், கடவுளை வழிபடுவதும் நமது பண்பாடு. எனவே, நமச்சிவாயம், நமச்சிவாயம் என்போம். நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ.க தொண்டர்கள் ஆரவாரம் செய்தும், கரவொலி எழுப்பியும் தங்களது ஆதரவினைத்தெரிவித்தனர்.

பாஜக பொறுப்பாளரின் இந்தப் பேச்சால், புதுச்சேரி அரசியலில் சலசலப்பு உருவாகியுள்ளது. நாராயணசாமிதலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததும், என்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ரங்கசாமிஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், “நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” என பா.ஜ.க பொறுப்பாளர் பேசியிருப்பது இரண்டு கட்சி தொண்டர்களிடையேயும், அரசியல் பார்வையாளர்களிடையேயும், புதுச்சேரி மக்களிடையேயும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Pondicherry
இதையும் படியுங்கள்
Subscribe