Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி... பத்திரப்பதிவு திறப்பு உத்தரவை திரும்ப பெற்ற தமிழக அரசு..! 

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

 

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனோ வைரஸ் சிக்கலில் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டு வந்தார் பிரதமர் மோடி. இந்தியா முழுவதும் அரசு அலுவலங்கள் இயங்காது என்று அறிவிப்பு வெளியான நிலையில் திடீர் என தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகள் மட்டும் வெள்ளிக்கிழமை முதல் திறக்க வேண்டும் என்று ரகசியமாக உத்தரவு பறந்தது. 
 

இந்த உத்தரவு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் கரோனா வைரஸ் பிரச்சனையில் எல்லோரும் தனித்திருக்கும் நிலையில் எங்களை மட்டும் இப்படி பண்ணலாமா என்று ஜனாதிபதி முதல் முதல்வரை புகார் மனுகள் அனுப்பப்பட்டன.


 

Department



நக்கீரன் இணையதளத்தில் அவர்களின் இந்த குமுறலை நாம் வெளியிட்டு இருந்தோம். நக்கீரன் செய்தியின் எதிரொலி ஆளும் கட்சியின் தலைமை வரை சென்ற நிலையில், நாளை நபத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்படும் என்ற உத்தரவு திடீர் என்று திரும்பப் பெறப்பட்டுள்ளது.   
 

இது குறித்து பத்திரப்பதிவு ஊழியர்கள் நம்மிடம் மிகவும் நெருக்கடியான நேரத்தில் துரிதமாக செய்தி வெளியிட்டதன் விளைவே இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது என நக்கீரன் இணையத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கையும் களவுமாக சிக்கிய சார் பதிவாளர்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
The sub registrar was caught Anti-bribery department in action

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபால கிருஷ்ணன் (வயது 65). இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாக இன்று (01.03.2024) திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள். இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் கடந்த 27 ஆம் தேதி (27.02.2024) திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் சபரி ராஜன் (வயது 41) என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார்.

அதற்கு திருவெறும்பூர் சார் பதிவாளர் சபரி ராஜன் ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் வீதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரி ராஜன் தனிநபர் சூர்யா (வயது 24) என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி பதிவு முடக்கப்படும்” - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Minister moorthy warns GST registration will be disabled if fake bill is produced

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (09-02-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளினுடைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.