Advertisment

அரசின் பதில் வரும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்! மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

nagapattinam mla thamimun ansari

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், முதல் டெஸ்டில் நெகட்டிவ் ஆகி விட்டால், அவர்களை அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்திட வேண்டும் என்பதை வேண்டுகோளாக முன்வைத்துஇன்று காலை முதல், நாகை மாவட்டம் தோப்புத்துறையில் தன் வீட்டு வாசலில் ம.ஜ.க. பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேளம்பாக்கம் முகாமில் உள்ள NEGATIVE ரிசல்ட் பெற்றவர்களை வீட்டிற்கு அனுப்பிட வேண்டும், அங்கு அவர்களது வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து அரசுக்குக் கோரிக்கை விடுத்துருப்பாதாகவும் அதுவரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்று கூறினார்.

Advertisment

மேலும் பேசும்போது, தாசில்தாரின் கவனக்குறைவு தான் கேளம்பாக்கத்தில் இரண்டு மரணத்திற்குக்காரணம்.தமிழர்கள் தாயகம் திரும்ப கூடுதலான விமான சேவையைத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். நெருக்கடியான நேரத்தில் சொந்தச் செலவில் தாயகம் திரும்புவர்களிடம் சிகிச்சைக்குக் கட்டணம் கேட்கக்கூடாது.

வெளிநாடுலிருந்து தமிழகம் திரும்பும் பயணிகளை மூன்று நாட்கள் முகாமில் வைத்து, ஆய்வில் அவர்களுக்கு NEGATIVE என்று வந்தால் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்து அங்கு தனிமைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் செலவு குறையும் தேவையற்ற பிரச்சனைகளும் இருக்காது.

இப்பிரச்சனைகளைக் கையாள வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான வாரியத்தை உயிரூட்டி ஒரு IAS அதிகாரியை நியமிக்க வேண்டும். இதற்குத் தற்காலிகமாக ஒரு அமைச்சரையும் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

MLA Nagapattinam THAMIMUN ANSARI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe