Advertisment

"சமூக நீதி அமைப்புகளோடு இணைந்து போராடுவோம்!" - தமிமுன் அன்சாரி!

thamimum

டெல்லியில் விவசாயிகள் மீது நடைபெற்ற அரச வன்முறைகளைக் கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாகப்பெற்றுக் கொடுக்கக் கோரியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் இன்று (28.01.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமை ஏற்றார்.இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார்.இதில், காவிரி விவசாயச்சங்கங்களின் கூட்டியக்கத்தலைவர் காவேரி தனபாலன், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமதாஸ், கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

Advertisment

நிறைவாகப் பேசிய ம.ஜ.க. பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, "விவசாயிகள்65 நாட்களாகப்போராடி வருகிறார்கள்.இதுவரை 64 விவசாயிகளைப் பறிகொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.குடியரசு தினத்தன்று அமைதியாகப் போராடிய விவசாயிகளுக்கு மத்தியில் வலதுசாரி மதவெறிக் கும்பல் புகுந்து கலவரம் செய்துள்ளார்கள். இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அங்கு போராட்டத்தில் இறந்த விவசாயிக்கு மத்திய அரசு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராடுவோம் என்றும்விவசாயச் சங்கங்களோடும், பொதுவுடைமைக் கட்சிகளோடும், சமூக நீதி அமைப்புகளோடும் இணைந்து போராடுவோம் என்றும்பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் சதக்கத்துல்லாஹ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சேக் மன்சூர், திருப்பூண்டி சாகுல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சபுர்தீன், அகமதுல்லா, முன்சி யூசுப்தீன், கண்ணு வாப்பா சாகுல் ஹமீது, மாவட்ட அணி நிர்வாகிகள் ஆரிப், ரெக்ஸ் சுல்தான், அப்துர் ரஹ்மான், பாரக், ஒன்றியச் செயலாளர்கள் நகர நிர்வாகிகள் எனப் பலரும்பங்கேற்றனர்.

THAMIMUN ANSARI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe