Advertisment

ஆப்ரேஷன் பெயில் ஆயிருச்சு... பாஜகவின் எச்.ராஜாவிற்கு சீமான் கொடுத்த பதிலடி!

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் மெரினாவில் போராட்டம் நடத்தினர். அதன் பின்பு நெல்லை கண்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நெல்லை கண்ணனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நெல்லை கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு நெல்லை கண்ணன் தரப்பு ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று (10.01.2020) விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

seeman

இந்த நிலையில் நெல்லை கண்ணனை போலீஸார் கைது செய்யப்பட்ட போது, பாஜகவின் தேசிய செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்ரேஷன் சக்ஸஸ் என்றும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநில தலைமை கூடி முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தார். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், " அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை என்றும் பாஜகவின் எச்.ராஜா கூறிய ஆப்ரேஷன் சக்ஸஸ் என கூறிய பதிவிற்கு ஆப்ரேஷன் பெயிலியர் என்றும் கூறியுள்ளார்.

Speech controversy politics ntk seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe