naam tamilar party that pushed ammk

Advertisment

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் (தனி)தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் அமமுக, நாம் தமிழர் , மக்கள் நீதி மய்யம் உட்பட 13 நபர்கள் வேட்பாளராக களம் கண்டனர்.

தேர்தல் முடிவுற்று இன்று நடைபெற்ற வாக்குகள் எண்ணிக்கையின் திமுக அதிமுக வேட்பாளருக்கிடையே வெற்றிக்கான கடும் போட்டி நிலவி வந்த நிலையில் சுவராசியமாக அமமுக வேட்பாளருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இதில் 26 ரவுண்டுகள் வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்றதில் திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இதேவேளையில் அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை விட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முக பிரியா 11,338 வாக்குகள் கூடுதலாக பெற்று அமமுகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளார். வேட்பாளராக களம் கண்ட அமமுக மாரியப்பன் கென்னடி இதற்கு முன் இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர் மூன்றாம் இடத்தில் வாக்குகள் பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.