Advertisment

சீமானை சந்தித்து ஆதரவு அளித்த பல்வேறு கட்சிகள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த, தமிழர் தேசிய விடுதலைக் கழகத் தலைவர் ஆ.கி.ஜோசப் கென்னடி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் இன்று காலை சந்தித்தனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர்.

Advertisment

seeman

அக்கடிதத்தில், ''தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழர் தேசிய விடுதலைக் கழகம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், இசுலாமிய சேவை சங்கம், தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மீனவர் முன்னணி, இஸ்லாமிய மக்கள் இயக்கம், புரட்சிகர கம்யூனிஸ்ட், இந்திய சுதந்திரா கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் கழகம், தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பேரவை, தமிழ்க இளையோர் எழுச்சிப் பாசறை, தமிழ் மீனவர் கழகம், கிருத்துவ மக்கள் மன்றம், வீரத்தமிழர் விடுதலைப் பேரவை, விடிவெள்ளி மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எதிர்வரும் ஏப்ரல் 18 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வாழ்த்துகளும் ஆதரவும் தெரிவிப்பதாகவும். தேர்தல் பணிகளில் உடன் சேர்ந்து பயணிக்கவும், பரப்புரைகளில் முழுமையாக இணைந்து தமிழ்த் தேசியத்தின் தேவையையும், நாம் தமிழர் கட்சி வெற்றிபெற வேண்டிய அவசியத்தையும் முன்வைத்து களம் நிற்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு அயராது உழைப்போம்'' என கூறப்பட்டுள்ளது.

Advertisment

elections Naam Tamilar Katchi parliment seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe