Advertisment

"எங்கள் ஆட்சி காலத்தில் வாழ்ந்து பாருங்கள்"- சீமான் பேச்சு!

Advertisment

NAAM TAMILAR KATCHI SEEMAN ELECTION CAMPAIGN AT DINDIGUL DISTRICT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தா தேவியை ஆதரித்து வத்தலக்குண்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

NAAM TAMILAR KATCHI SEEMAN ELECTION CAMPAIGN AT DINDIGUL DISTRICT

Advertisment

அப்போது அவர் கூறியதாவது; "திராவிட கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து தமிழகத்தைச் சீரழித்து விட்டார்கள். 1000, 1500 தருவதாகக் கூறி தமிழனின் தன்மானத்தையும் சீரழிக்கத் தயாராகி விட்டார்கள். 1,000- க்கும், 500- க்கும் ஓட்டு போடுவதைத் தவிருங்கள். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஏன்? எடப்பாடி வரையிலான ஆட்சிக் காலத்தில் வாழ்ந்து விட்டீர்கள். ஒருமுறை எங்கள் ஆட்சி காலத்தில் வாழ்ந்து பாருங்கள். எல்லா வளங்களும் நலன்களும் கிடைக்கச் செய்கிறேன். ஒரு மாற்று அரசியலுக்கானப் பாதையை உருவாக்கி உள்ளோம். எனவே, அனைவரும் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

Naam Tamilar Katchi seeman tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe