Advertisment

நாம் தமிழர் கட்சிக்கு தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு 

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி '"விவசாயி" சின்னத்தில் போட்டியிடுகிறது.

Advertisment

நாம் தமிழர் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் சை.சையத் சலாவுதீன் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் அடங்கிய குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை வாக்குறுதியை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைத்து ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்து கடிதம் வழங்கினர்.

Advertisment

naam thamizhar katchi

தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் களச்செயற்பாடுகள் குறித்தும் பரப்புரைப் பயணத்திட்டம் மற்றும் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய இயக்கங்கள் கட்சிகள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Support elections parliment seeman naam thamizhar katchi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe