ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவகத்தில் சர்ச்சைக்குரிய வசனம் பேசி டிக்டாக் வீடியோ எடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

naam tamilar katchi

Advertisment

Advertisment

திருச்சி பகுதியைச் சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சி இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் டிக்-டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சர்ச்சைக்குரிய வசனங்கள் மற்றும் சைகைகள் இடம் பெற்று உள்ளது. இதனை பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாட்டை முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.