Advertisment

வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பலரும் சுயேச்சையாக களம் காண்கின்றனர். அதேபோல் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பிரபல குணச்சித்திர நடிகர் மயில்சாமி போட்டியிடுகிறார். கவிஞர் சினேகன் பிரச்சாரம் செய்த விருகம்பாக்கம் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மயில்சாமி, வீடு வீடாகச் சென்று அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது மற்ற கட்சியினரைப் போல் அல்லாமல், கொட்டுமேளம், ஆட்டம் பாட்டம் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் ஐந்தாறு நபர்களுடன் எளிமையாக நடந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தனது சின்னமான விசிலை ஊதி ஊதி, மக்களை வெளியே வர வைத்து, சகஜமாக பேசி சிரித்து வாக்கு சேகரித்தார்.