Muthukumaran

காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. எம்.பி. முதுக்கருப்பன் தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். அதன்படி ராஜினாமா கடிதத்தை தயார் செய்த முத்துக்கருப்பன், இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளிக்க திட்டமிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக முத்துக்கருப்பன் எம்.பி. இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

Advertisment

கடுமையான சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த பிறகும் தாமதப்படுத்துகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை. இதனால் ராஜினாமா செய்ய உள்ளேன். ராஜினாமா செய்வதாக அறிவித்ததால், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்னை சமாதானம் செய்ய நினைப்பார்கள் என்பதால் செல்போனை அணைத்து வைத்து விட்டேன். ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளிக்க உள்ளேன் என்றார்.