இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இரா,முத்தரசன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு 28 ம் தேதி துவங்கி 31 ம் தேதி முடிவடைந்தது. மாநில மாநாட்டின் இறுதியில் மாநில செயலாளர் தேர்வு செய்வது வழக்கம். அதன்படி, நான்காவது நாளான 31 ம் தேதி மதியம் மாநில செயலாளர் தேர்வுக்கான மாநில செயற்குழு கூடியது, மாலை 5 மணிக்கு மீண்டும் முத்தரசனே மாநில செயலாளராக தொடருவார் என ஒருமனதாக அறிவித்தனர். முத்தரசனே இரண்டாவது முறையாக மாநில செயலாளராக தொடருவார் என சி,மகேந்திரன் முன்மொழிந்தார். முத்தரசன் மீண்டும் மாநில செயலாளராக தேர்வுசெய்யப்பட்டதற்கு அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்கூறினர்.