"உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு, மறைமுக தேர்தல் நடத்தப்படும், என்கிற அவசர சட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை", என கொந்தளிக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

mutharasan condemns the ordinance that brought by Tamil Nadu Govt

Advertisment

அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிக்கு வந்திருந்தவர், பத்திராக்கையாளர்களை சந்தித்து கூறுகையில், "இலங்கையில் பாதுகாப்புதுறை அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கை நாட்டின் அதிபராகவும், அவர் சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக மாறியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தான் இலங்கையில் இறுதிக்கட்ட போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த நாசகார கொடியவர்கள், போர் குற்றம் புரிந்து இருக்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டும் இரண்டு குற்றவாளிகளான இவர்கள் நாட்டை ஆளுகிற வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் இந்தியாவிற்கு கோத்தபயா வர இருக்கும் சூழலில் மத்திய அரசு அவரிடம் இனப்படுகொலை குறித்து விவாதித்து சிங்கள மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும், பொறுப்பும், கடமையும் மத்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது".

இவர் மேலும், "தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்ற அவசர சட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது." என்றார்.