Advertisment

திமுக வேட்பாளராகவே களமிறங்கும் முருகவேல்ராஜன்....

Murugavelrajan to contest as DMK candidate

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் விடுதலை கட்சியின் தலைவரும் நிலக்கோட்டை திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளருமான முருகவேல் ராஜன் தொகுதியில் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார்.

Advertisment

அதன் பின் வத்தலகுண்டு திமுக ஒன்றிய அலுவலகத்தில் முருகவேல்ராஜன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,“நிலக்கோட்டை தொகுதி கடந்த 25 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக அரியணையில் அமர்வது உறுதியாகிவிட்டது. மேலும் நிலக்கோட்டையில் நீண்ட ஆண்டுகளாக உதயசூரியன் வெற்றி பெறவில்லை. உதயசூரியன் வெற்றிபெற வேண்டும் என்ற அடிப்படையில், நான் திமுக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவராக இருக்கிறேன். தற்போது திமுக வேட்பாளராகவே களம் இறங்கி தேர்தல் பணியாற்ற உள்ளேன்” என்று கூறினார்.

Advertisment

nilakottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe