Advertisment

திருச்சி நகரில் கொடூரக் கொலை... போலீசார் விசாரணை... 

ddd

திருச்சி நகரப்பகுதியில் பன்றி வளர்த்தல், ஃபைனான்ஸ் மற்றும்கேபிள் தொழிலில் ஈடுபட்டு வந்த 'பன்றி' சேகரை, கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி மர்ம கும்பல் ஒன்று, அவரது வீட்டின் பின்புறம் வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தது.

Advertisment

இவ்வழக்கில் தொடர்புடைய அவரது அண்ணன் பெரியசாமி இரண்டாவது மனைவி பார்வதி (41), இவரது மகன் தங்கமணி (25), மகன் சிலம்பரன், பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன்அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (22), சதாம் உசேன் (22) உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

Advertisment

வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தற்போது வெளியே இருக்கும் குற்றவாளிகளில்பெரியசாமி மகன் ரெளடி சிலம்பரசன் (35) என்பவரை அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்கள் நேற்று இரவு வெட்டி கொலை செய்துள்ளனர்.தகவலறிந்த அரியமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிலம்பரசன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police investigation trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe