Advertisment

ஆ.இராசாவை தலைவராக்கிவிடுங்கள்... சீமான் பேச்சு...

வாய்ச்சொல் வீரரின் கர்ஜனை என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஒரு செய்தி போடப்பட்டிருந்தது. அதில், ''மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை நேரில் சந்திக்கிறார். வீதியில் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். நடந்து செல்வது மட்டுமல்ல திண்ணையில் அமர்ந்தும் பேசுகிறார். ஸ்டாலினின் இந்த அணுகுமுறை மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

seeman

ஒரு போர்ஜரி வீரர் இருக்கிறார். அவர் யாரைத் தமிழர் என்று சொல்கிறார்களோ அவர் மட்டுமே தமிழர். இந்த மாமனிதர் தம்மை மாவீரர் என்று நினைத்துக்கொண்டு உரையாற்றுவார். ஸ்டாலின் திண்ணையிலே போய் உட்காருகிறார். டீ சாப்பிடுகிறார். வீதியிலே நடக்கிறார். முதல்வரானால் இப்படித் திண்ணையிலே போய் அமர்ந்து டீ குடிப்பாரா? வீட்டிலே இருந்து பிளாஸ்கிலே எடுத்து வந்து அல்லவா குடிப்பார் என்று பேசி இருக்கிறார்.

அயோத்திதாசப் பண்டியர் பற்றி திமுககாரர்களுக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அயாத்திதாசரைப் பற்றியும், அம்பேத்கரைப் பற்றியும் கர்ஜனை வீரருக்கு அய்யம் ஏதாவது வந்தால் ஆ.இராசாவைப் போய் பாருங்கள். இல்லையெனில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து அவரை அழையுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 09-05-2019 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் மொ.வெ.விஜயராகவனை ஆதரித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

''முரசொலியில் தலையங்கமே நான்தான் இன்றைக்கு. என்னை வாய்ச்சொல்லில் வீரர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்போது உங்கள் செயல் தலைவர் அனைத்தும் செயலா? என்ன உங்கள் பிரச்சனை? ஐம்பது வருடமாக கச்சத்தீவை மீட்கப் போராடுவோம் என்கிறீர்களே? அதைவிடவா ஒரு கேவலம் இருக்கு? வாய்ச்சொல் இருக்கு? என்னிடம் வாய் கொடுத்து புண்ணாக்கிக்க வேண்டாம். ஏதோ என் சொந்தக்காரர்களெல்லாம் அந்தக் கட்சியில் இருப்பதால் மன்னிச்சி கடந்து போயிக்கொண்டிருக்கிறேன். தேவையில்லாமல் என்னை நோண்ட வேண்டாம். அது என்ன அயோத்திதாசரை தெரியுமா? இரட்டை மலை சீனிவாசனைத் தெரியுமா? ஆ.இராசாவை கேட்டுப்பார். ஆ.இராசாவுக்குத்தானே திமுகவில் இரட்டைமலை சீனிவாசனை, அயோத்திதாசரைப் பற்றி தெரியும். அவரை தலைவராக்கிவிடுங்கள்''. இவ்வாறு பேசினார்.

naam thamizhar katchi murasoli seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe