மூணாறு நிலச்சரிவு நடந்த பெட்டிமுடி மலைப்பகுதியில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தோண்டும் இடத்தில், அழுகிய நிலையில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிணங்கள் கிடைக்கின்றன. பலியானவர்களில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள மல்லியில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த6 பேரும் பலியாகியுள்ளதாகதெரியவந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும், தமிழக முதலமைச்சரிடம், ‘அங்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் உணவும், தங்குமிடமும் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு உதவிகள் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆறுதல் கூறும்போது, இதை அவர் தெரிவித்து, உரிய நிவாரணம் நிச்சயம் கிடைக்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.