Skip to main content

சின்னம் காப்பியல்ல, கமலுக்கே சொந்தம்! - மீம்ஸை முடித்து வைத்த தமிழ் மன்றம்   

Published on 28/02/2018 | Edited on 28/02/2018

 

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21-ஆம் தேதி மதுரையில்  'மக்கள் நீதி மய்யம்'  என்ற பெயரில்  புதிய கட்சியைத் தொடங்கி அதன் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். இதற்கிடையில் கட்சியின் பெயர், சின்னம் பற்றி பல கேள்விகள் எழுந்து வந்தன, காரணங்கள் பேசப்பட்டன. கட்சியின் லட்சினை ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் லட்சினையிலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் கூட விமர்சனங்கள் வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது.   

 

makkal neethi mayyam logo



மும்பை செம்பூர் தமிழ் பாசறையின் லட்சினையிலிருந்து கமல் கட்சி லட்சினை எடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அறிந்த செம்பூர் தமிழ் மன்ற நிர்வாகிகள், தாங்களே சென்னை வந்து கமல்ஹாசனை சந்தித்து, தங்கள் லட்சினையின் உரிமையை அவரிடம் வழங்கி அவரது அரசியல் பிரவேசம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர். செம்பூர் தமிழ் பாசறை நிர்வாகி ராஜேந்திரன்  பேசுகையில், "தமிழகத்தில் மாற்றம் பிறக்கவேண்டும் என்ற நோக்கில் கமல் அவர்கள் தொடங்கியுள்ள கட்சியின்  சின்னம் எங்கள் தமிழ் பாசறை சின்னத்தின் சாயலில்  இருப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர் அந்த சின்னத்தை பயன்படுத்த அன்புடன் மனமுவந்து   முழுஉரிமை தருகிறோம். அவர் கட்டும் ஜனநாயக கோவிலில் எங்கள் பங்கும் இருக்கட்டும். நாங்களும் அந்த சின்னத்தை பயன்படுத்துவோம்"  என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்