Advertisment

முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இணைந்தனர்

மு

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இவ்விருவரும் பொருளாளர் துரைமுருகனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

Advertisment

k

1977-ல் ஆலங்குளம் தொகுதி, 1980-ல் பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ.வாக அவர் வெற்றி பெற்றார். திமுகவில் இணைந்தபிறகு 2006-ல் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருப்பசாமி பாண்டியன். நெல்லையை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன், அ.தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக இருந்த போது கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதன்பின்னர் அவர் தி.மு.க.வில் சேர்ந்து நெல்லை மாவட்ட செயலாளராகவும், தென்காசியில் எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு பெற்று பணியாற்றினார். கடந்த 2015ம் ஆண்டு தி.மு.க. உட்கட்சிதேர்தலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கருப்பசாமி பாண்டியன் தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டார். அடுத்து கருப்பசாமி பாண்டியன், ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியில் கழக மாநில அமைப்பு செயலாளராக பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் கருப்பசாமி பாண்டியன் அந்த பதவி தேவையில்லை என்று கூறி அதிமுகவில் எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் திமுகவின் மூத்த தலைவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

Advertisment

m

திமுகவின் தருமபுரி மாவட்ட செயலாளராகவும், முன்னாள் திமுக அமைச்சராகவும் இருந்த வ.முல்லைவேந்தன் கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கட்சிப்பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்ற புகாரின் அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின்னர் அவர் 2015ல் தேமுதிகவில் இணைந்தார். இந்நிலையில், திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அழைப்பின் பேரில் மீண்டும் அவர் திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

karuppasamy pandiyan mullaivenwenthan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe