பாஜகவின் முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான எம்.ஆர்.ஜெமிலா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அவரது அடையாறு இல்லலத்தில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது அமமுக வின் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இருந்தார். அதிமுக, சமத்துவமக்கள் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சியினரை சேர்ந்த பலரும் தினகரன் முன்னிலையில் தங்களை அமமுகவில் இணைத்துக் கொண்டனர்.