Skip to main content

கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய எம்.பி. கனிமொழி..!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

MP returns home after corona treatment

 

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுகவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக மகளிரணி செயலாளரான கனிமொழியும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிராச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

 

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக பரவி வருகிறது. அதனால் இந்தக் காலக்கட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள் என பலரும் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகினர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கனிமொழி ஈடுபட்டிருந்தார். பின்னர் சென்னைக்குத் திரும்பிய அவருக்கு உடற்சோர்வு ஏற்பட்டது.

 

பின்னர் பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானது. தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு ஒருநாள் முன்பு கரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் (06.04.2021) மருத்துவமனையில் இருந்த கனிமொழி, கரோனா பாதுகாப்புக்கான முழு கவச உடையுடன் ஆம்பூலன்ஸில் வந்து வாக்களித்துச் சென்றார். இதனையடுத்து கரோனா சிகிச்சையில் குணமடைந்த காரணத்தால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கனிமொழி நேற்று வீடு திரும்பினார்.

 

அவருக்கு மகளிர் அணியினர் வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கனிமொழி எந்தப் பணியிலும் ஈடுபடாமல் 5 நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விருந்து பரிமாறிய  கனிமொழி; மகிழ்ச்சியில் உடன்பிறப்புகள் ! 

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Kanimozhi fed the DMK who worked for victory

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை டெபாசிட்டை காலி செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். வெற்றி பெற்றதை அடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல் எம்.பி.யாக களமிறங்கினார் கனிமொழி.  ஓட்டு கேட்கப் போகும் போது எப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்றாரோ அதே போல அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

Kanimozhi fed the DMK who worked for victory

இதனையடுத்து, கனிமொழி எம்.பி. தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த திமுகவினருக்கு விருந்து கொடுத்து மகிழ்விக்க விரும்பினார். அதன்படி திமுக தொண்டர்களுக்கு  இன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியால் மஹாலில்,  சைவம் மற்றும்  அசைவ விருந்து வழங்கினார். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து வழங்கப்பட்டது.  விருந்தில் கலந்து கொண்ட அனைத்து  நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் பரிமாறி, அவர்களின் நலம் விசாரித்தார்.

Kanimozhi fed the DMK who worked for victory

வயதான மூத்த பெண்மணிகள் சிலர், கனிமொழியிடம் கோரிக்கை மனுக்களும் கொடுத்தனர். சுமார் 8,000 பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.  அவர்களுடன் அமர்ந்து கனிமொழியும் சாப்பிட்டார்.  கனிமொழியின் விருந்து வைபவமும் உபசரிப்பும் கண்டு மிகுந்த உற்சாகமானர்கள். இந்த விருந்து வைபத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

'எந்தக் காலத்திலும் திமுக கொள்கையை விட்டுக் கொடுக்காது' - கனிமொழி பேட்டி  

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'DMK will never give up its policy' - Kanimozhi interview

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் துரைமுருகன் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி பேசுகையில், ''கலைஞரின் மனசாட்சியாக திமுக போற்றிய மாறன் இருந்த பொறுப்பிற்கு என்னை தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தன்னுடைய கொள்கைகளை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. பத்தாண்டு காலமாக பாஜகவுடைய எத்தனையோ மசோதாக்களை நாங்கள் எதிர்த்திருக்கிறோம். தொடர்ந்து சிறுபான்மை மக்களை; இந்த நாட்டை; அரசியல் சாசனத்தை; சமூக நீதியை காக்கக்கூடிய வகையில் திமுகவின் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். இதுதான் முதல்வர் எங்களுக்கு சொல்லி இருக்கக் கூடிய அடிப்படை'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? ஆட்சி அமைக்க முடியவில்லை வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக என்ன நடவடிக்கைகளை எடுக்கும்' எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கனிமொழி, 'இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நிச்சயமாக வலியுறுத்துவோம். நீட் தேர்வு விலக்குக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அதுவும் இன்று கண்கூடாக எத்தனைக் குழப்பங்கள், எத்தனை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாடு முழுவதும் பார்க்கக்கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து நீட்டுக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் செயல்படும். அதேபோல் கல்வி கடன் ரத்து என்பதை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்'' என்றார்.