மத்தியப் பிரதேசத்தின் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், இன்று (21.07.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை சந்தித்தார். இந்தச் சந்திப்பு தலைமைச் செயலகத்தில் உள்ள மா. சுப்பிரமணியன் அறையில் நடந்தது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், மரியாதை நிமித்தமாக இன்று தலைமை செயலகத்தில் நம்மை சந்தித்தார்’ என்று பதிவிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.